tamilnadu

img

மத்திய பிரதேசத்தில் கற்களை எறியும் வினோத திருவிழா!

மத்திய பிரதேசத்தில் ஆண்டுதோறும், ஒருவர் மீது ஒருவர் கற்களை எறியும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஆண்டுதோறும் ‘கோட்மார்’ எனப்படும் ‘கல் எறிதல்’ திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது, பந்துர்னா மற்றும் சாவர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜாம் நதிக்கரையின் இருபுறங்களிலும் திரண்டு கொண்டு, பின்னர் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக்கொள்வர். இது நூற்றாண்டு காலங்களாக அங்கு இருந்து வரும் வழக்கம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில் சிந்த்வாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ராய் கூறுகையில்,திருவிழா  இடம் முழுவதும் போலீசார் மற்றும் சி.சி.டி.வி  மூலம் கண்காணிக்கப்பட்டது என்றார்.மேலும் இத்திருவிழாவில்   400-க்கும் மேற்ப்பட்டோர் சிறிய அளவிலான காயங்களுடனும்,12 பேருக்கு மேல் பலத்த காயத்துடனும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
 

;